பின்னூட்டம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
நாம் ஆபீஸில் அன்றாடம் பயன்படுத்தும் முக்கியமான பைல்கள் மற்றும் நாம் காப்பி செய்து பயன்படுத்தும் ஆடியோ வீடியோ மற்றும் போட்டோக்கள் போன்றவற்றை மற்றவர் பயன்படுத்த முடியாத வகையில் பாஸ்வேர்டு கொடுத்து பூட்டி வைக்க எத்தனையோ மென்பொருள் இன்றைய காலத்தில் வந்துவிட்டது. இதில் சிறந்த மென்பொருள்கள் நமக்கு தேவை என்றால் பணம் கொடுத்து வாங்கினால்தான் அதனை முழுமையாக பயன்படுத்த முடியும் என்ற நிலை இன்று உள்ளது. மேலும் என்னதான் கம்ப்யூட்டரில் நாம் பாஸ்வேர்டு போட்டு நம் பைல்களை மறைத்து வைத்தாலும் சில முக்கிய பைல்களை CD, DVD அல்லது Pen Drive ல் காப்பி செய்யும்பொழுது அது மற்றவர் கையில் கிடைத்தால் அதனை அவர்கள் எளிதில் திறந்து பார்த்துவிட முடியும். இதற்க்கு தீர்வுதான் என்ன ?
உங்களுக்காகவே ஒரு சிறந்த இலவச மென்பொருள் வந்துவிட்டது. இதுதான் TrueCryptஎன்ற மென்பொருள். இதனை http://www.truecrypt.org/ என்ற தளத்தில் இருந்து டவுண்லோடு செய்துகொள்ளலாம்.
இதன் மூலம் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலோ அல்லது CD, DVD மற்றும் Pen Drive போன்றவற்றில் தாமதம் இல்லாமல் பைல்களை காப்பி செய்து எளிதாக பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி என்ற விளக்கத்தை இந்த PDF பைல் மூலம் நீங்கள் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
![]() |
No comments:
Post a Comment